business

img

ரூ. 60 ஆயிரம் கோடி நஷ்டக் கணக்கு... அசையா சொத்துகளை ஏலம் விடும் ஏர் இந்தியா....

மும்பை:
கொரோனா பெருந்தொற்று காரணமாக தொடர் வருவாய் இழப்புக்கு உள்ளாகியுள்ள ‘ஏர் இந்தியா’ பொதுத்துறை விமான நிறுவனம், நாடு முழுவதும் உள்ள அசையா சொத்துகளை விற்பனை செய்வதாக அறிவித்து உள்ளது. இதற்கான ஏலத்தை ஜூலையில் அது நடத்துகிறது.

கொரோனா தொற்று பரவல் உலகப் பொருளாதாரத் தையே புரட்டிப்போட்டுள்ளது. தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கையாக உலக நாடுகள்விமான சேவை உள்படஅனைத்து விதமான போக்குவரத்துகளையும் தடை செய் துள்ளன. இந்தியாவிலும் விமானசேவைகள் முடக்கப்பட்டு உள் ளதால், விமான நிறுவனங்கள் பெரிய அளவிற்கு இழப்பைச்சந்தித்துள்ளன. பொதுத்துறையான ‘ஏர் இந்தியா’ நிறுவனம் ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், கொரோனா பொதுமுடக்கம் இந்த இழப்பை ரூ. 60 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள தனது அசையா சொத்துகளை ரூ.300 கோடிக்கு ஏலம் விட ‘ஏர்இந்தியா’ நிறுவனம் முடிவெடுத்துள்ளது. முதற்கட்டமாக, தில்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்பட 10 நகரங்களில் உள்ள 14 அசையா சொத்துகளை விற்க முடிவு செய்துள்ளது.‘ஏர் இந்தியா’ நிறுவன அசையா சொத்துக்களை வாங்க விரும்புவோர் ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் www.airindia.in இணையதளத்தில் நடக்கும் ஏலத்தில் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது.

;